"சுக்கா மிளகா சுதந்திரம் என்பது கடையில் வாங்க ..
போராடிப் பார் ! போராட்ட வியர்வைக்குப் பின்
நுனி நாவில் ஒரு சொட்டு தேனாய் இனிக்கும்...
நீ உணர்வாய் சுதந்திரம் இன்னதென்று ! "
_________________
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! எதிர்வரும் 26.03.2015அன்று நடைபெற உள்ள தமிழகம் தழுவிய வேலை நிறுத்தத்தை ஒட்டி கோட்ட மற்றும் கிளைகளில் நடத்த வேண்டிய மண்டல ரீதியிலான ஆயத்தக் கூட்டங்கள் பட்டியல் கீழே அளிக்கப் பட்டுள்ளது. இதன் நகல் ஏற்கனவே அந்தந்த மண்டல செயலர்கள் மூலம் உரிய கோட்ட /கிளைகளுக்கு அனுப்பப் பட்டுள்ளது. எனவே குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் அந்தந்த அஞ்சல் மூன்று கோட்ட/ கிளைச் செயலர்கள், தல மட்டத்தில் உள்ள இதர சங்கங்களின் கோட்ட/ கிளைச் செயலர்களை ஒருங்கிணைத்து வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்களை சிறப்பாக நடத்திட வேண்டுகிறோம். மாநிலச் சங்க நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டு வேலை நிறுத்தத்தை முழுமையான வெற்றியாக ஆக்கிட வேண்டும் என்றும் வேண்டுகிறோம். சென்னை பெருநகர மண்டல சுற்றுப் பயண அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும்.
ஒவ்வொரு நாளும் போராட்ட வீச்சு பெருகட்டும் !
போராட்ட நாளில் பூகம்ப வெடிப்பாய் மாறட்டும் !

WITH FRATERNAL GREETING....
COM.A.RAMESH,
DIVISIONAL SECRETARY,
AIPEU CLASS-III,
KARAIKUDI DIVISION,
KARAIKUDI-630001.
No comments:
Post a Comment